மே மாதத்தில் மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

மே மாதத்தில் மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

மே மாதத்தில் மாத்திரம் 6,042 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன,

இதன்படி, மார்ச் மாதத்தில் 3,766 பேரும் ஏப்ரல் மாதத்தில் 5,166 பேரும் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 13 பேர் டெங்கு காய்யச்சலால் உயிரிழந்துள்ளனர்.

பருவமழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

 

CATEGORIES
TAGS
Share This