வீதி விபத்துக்களால், இந்த வருடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வீதி விபத்துக்களால், இந்த வருடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் 1,062 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதே காலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 9000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்
அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இந்த வருடம் 3 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This