இரத்தினபுரியில் நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகையில் ம ருத்துவ சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ள
வேண்டியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையென அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,311 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இப்பகுதியில் நோயைப் பரப்பும் முதன்மை நோய்க்கிருமியாக ஏடிஸ் அல்போபிக்டஸ் நுளம்பை சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.