நாடு முழுவதும் 70,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு

நாடு முழுவதும் 70,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு

இன்று (1) மாலை 05 மணி நிலவரப்படி,சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 70,012 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை ( தெரிவித்துள்ளது.

இவற்றில் 41,684 மின் தடைகள் சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

மீதமுள்ள மின் தடைகளை புனரமைக்க கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This