வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு

வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 706 ஏக்கர் அரசாங்கக் காணிகளை 2025 ஆம் ஆண்டுக்குள் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.

நாடாளுடன்றில் ப. சத்தியலிங்கம் இன்று வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்குகின்றன.

குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது” என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

Share This