பொலிவியாவில் நடந்த கோர விபத்து – 30க்கும் மேற்பட்டவர்கள் பலி

பொலிவியாவில் நடந்த கோர விபத்து – 30க்கும் மேற்பட்டவர்கள் பலி

பொலிவியாவில் மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யோகல்லாவின் தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் குறித்த பேருந்து சுமார் 800 மீ (2625 அடி) பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நான்கு குழந்தைகள் உட்பட பதினான்கு பேர் காயமடைந்ததாக உள்ளூர் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிவியாவில் குறிப்பாக மலைப்பகுதிகளில் ஆபத்தான சாலைகள் உள்ளன.

போடோசி மற்றும் ஒருரோ நகரங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகமாக வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், ஓட்டுநரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அதிகாரிகள் நம்புவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை தென் அமெரிக்க நாட்டில் பதிவான மிக மோசமான சாலை விபத்து இது என்று நம்பப்படுகிறது.

காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொலிவியாவில் கொடிய சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

கடந்த மாதம், போடோசிக்கு அருகிலும் பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

அரசாங்கத் தரவுகளின்படி, சுமார் 12 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,400 பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர்.

Share This