கொவிட் தொற்று – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் துணை வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
கொவிட் தொற்றால் எந்தவொரு அதிகரிப்பும் பதிவாகாத போதிலும் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு
நோயெதிர்ப்பு நிபுணர் பேராசிரியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.
முகமூடி அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
கொவிட் தொற்றின் அதிகரிப்பைக் கையாள்வதற்கு நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயாராக உள்ளதென சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலைமை மோசமடைந்தால் போதியளவான தனிமைப்படுத்தல் பிரிவுகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குழந்தைகள் மத்தியில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்தார்.
சீரற்ற வானிலை காரணமாக நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.