டில்லியில் பல்வேறு நலத்திட்டங்களை இன்று மோடி திறந்து வைக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டில்லியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 1675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்து சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார்.
டில்லியின் நௌரோஜி நகரில் அமைக்கப்பட்டுள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் 2500 வீடுகள் கொண்ட குடியிருப்புகளை மோடி திறந்து வைப்பதோடு, துவாராகாவில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இ யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தையும் ஆரம்பித்து வைக்கிறார்.
டில்லி பல்கலைக்கழகத்தில் ரூபாய் 600 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு இன்று மோடி அடிக்கல் நாட்டுகிறார்.