மோடி , ட்ரம்ப் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் வருகை மிகவும் சிறப்பானது என தெரிவித்த ட்ரம்ப் இந்தியா, மோடியுடனான தனது நல்லுறவைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
இவேளையில் அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கவலை வெளியிட்ட ட்ரம்ப் இந்தியா விதிக்கும் வரியையே அமெரிக்காவும் விதிப்பதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு மட்டுமல்லாது இராணுவம், வர்த்தகம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப துறை, அணுசக்தித் துறையிலும் அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘Our Journey Together’ என்ற புத்தகத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசாக வழங்கி அதில் ‘பிரதமரே நீங்கள் சிறந்தவர்’ என்றும் எழுதி கையெழுத்திட்டுள்ளார்.