இலங்கை வருகின்றார் மோடி – நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (4ஆம் திகதி) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் வருகையை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை மாலை ஆறு மணி முதல் இரவு 10:00 மணி வரை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தக் காலகட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்கள், குறித்த வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு மேலும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொடர்ந்து ஐந்தாம் திகதி சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்ல அபேகம பிரதேசம் ஆகிய பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் வீதிகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாரதிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, சாரதிகளை மாற்றுப் பாதைகளுக்கு வழிநடத்துமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இலங்கை பொலிஸாரினால் செயல்படுத்தப்படும் இந்த சிறப்பு போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.