அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்

அமைச்சர் விஜித ஹேரத் சவுதி வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துக்கும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரியாத்தில் நடைபெற்ற 26வது UNWTO பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் சவுதி தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையில், பலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதில் சவுதி அரேபியாவின் பங்களிப்பை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பாராட்டியுள்ளார், மேலும் பலஸ்தீனத்திற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் நினைவு முத்திரையையும் சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் வெளியிட்டார்.

Share This