அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
தன்னை அவதூறு செய்யும் நோக்கில் அல்லது அரசியலில் தனது நம்பிக்கையை உடைக்கும் நோக்கில், நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து யாரோ தவறான தகவல்களைப் பதித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (16) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார என்ற பெயருக்கு முன்னால் கலாநிதி ஹர்ஷன நாணயக்கார என பிரசுரிக்கப்பட்டதுடன், அமைச்சர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அது சரி செய்யப்பட்டது. இது தொடர்பில் அண்மைய தினங்களாகவே அதிகம் விமர்சிக்கப்பட்டது.
இங்கு, நாடாளுமன்ற தலைமைச் செயலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பதிவேற்றியதில் தவறு இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
நாடாளுமன்றத்தின் தலைமைச் செயலகம், அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.