பால் தேநீரின் விலை அதிகரிப்பு

பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.
இதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒரு கோப்பை தேநீரின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ,புதிய விலை 1,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்
பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.