மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா இன்று திங்கட்கிழமை மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.