வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என மக்களுக்கு உண்மையை கூறுவோம் – திலித்

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது  என மக்களுக்கு உண்மையை கூறுவோம் – திலித்

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மக்களுக்கு உண்மையை கூறுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்.  அவர்கள் பாவம் என்றே நான் நினைக்கிறேன். மக்களும் தற்போதும் பெரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினூடாக முச்சக்கர வண்டிகளை அலங்காரப்படுத்துவதை நிறுத்தியுள்ளன. இவ்வாறான செயல்களினூடாக நாட்டை  முன்கொண்டு செல்ல முடியாது.

உங்களிடம் சிறந்த வேலைத்திட்டம் இல்லை. க்ளீன் ஸ்ரீலங்கா என்று கூறி முச்சக்கர வண்டிகளின் பாகங்களை அகற்ற மாத்திரமே உங்கள் அரசாங்கத்தால் முடியும்.

வரவு செலவுத் திட்ட அறிக்கை தொடர்பில் நன்கு அறிந்திருந்தால் உங்களுக்கு தெரியும்  உங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று. ஆகவே நான் கூறுகிறேன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என மக்களுக்கு உண்மையை கூறுவோம்.” என்றார்.

 

 

Share This