மாத்தறை தெவிநுவர துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சந்தேகநபர்கள் நால்வர் கைது

மாத்தறை தெவிநுவர துப்பாக்கிச்சூட்டு சம்பவம் –  சந்தேகநபர்கள் நால்வர் கைது

மாத்தறை தெவிநுவர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் முன்னதாக சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 21 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது வேனில் வருகைத்தந்த சிலர் துப்பாக்கிச்சூடு நடத்திய போது 28 மற்றம் 29 வயதான இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Share This