தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் – நாமல் எம்.பி

தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் – நாமல் எம்.பி

தாம் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட இன்று மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜூலை ஒன்பதாம் திகதியை நினைவுகூர்ந்து நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்பட்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவப்பட்டதன் மூலம் தாங்கள் ‘ஏமாற்றப்பட்டதாக’ வருத்தப்படுபவர்கள் பலர் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இளைஞர்கள் நேர்மையான போராட்டங்களை நடத்தி இந்த நாட்டில் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதாகக் கூறிய அவர், 88/89 காலத்தில் இருந்த அமைப்பைப் போன்ற, அதை விட பழமைவாதமான ஒரு அரசாங்கம் நிறுவப்பட்டதாகக் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் ‘ஆம் ஐயா’ என்று சொல்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எதையும் ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை இருப்பதாக நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Share This