
மண்டேல்சன் விவகாரம் – அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியீடு
முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) தொடர்பான முதல் அரசாங்க ஆவணங்கள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரம் முடிந்த பின்னர், பிரதமரின் தலைமைச் செயலாளர் டேரன் ஜோன்ஸ் ய(Darren Jones) இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட உள்ளார்.
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆவணங்கள் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
கட்சர்வேட்டிவ் கட்சியின் அழுத்தத்திற்கு பின்னர், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத்தில் அமெரிக்க தூதுவராக மண்டேல்சன் நியமிக்கப்பட்டமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
பின்னர் அவர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதேவேளை, மண்டேல்சன் மீது நடைபெற்று வரும் பொலிஸ் விசாரணை காரணமாக சில ஆவணங்கள் வெளியிடாமலிருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக ரீதியாக முக்கியமான தகவல்கள் கசியவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பீட்டர் மண்டேல்சன் ( Peter Mandelson) முழுமையாக மறுத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான மேலும் புதிய தகவல்கள் இன்று அரசியல் மையத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
