ஸ்காட்லாந்தில் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர மையத்தில், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒருவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ருமேனிய நாட்டச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி 27 வயதான பெண் மருத்துவர் ஒருவர் வீதியில் சென்ற போது அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் கிளாஸ்கோ உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
