வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்

வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (17) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
பொகவந்தலாவையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதி ஊடாக முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிப் பெண் ஒருவரை, திருக்கோவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபர் இடைமறித்து, பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக பொலிஸார் வெளியிட்டு, அவர் தொடர்பாகத் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
