ஹொரணையில் நபர் ஒருவர் அடித்துக்கொலை – இரு பெண்கள் கைது

ஹொரணையில் நபர் ஒருவர் அடித்துக்கொலை – இரு பெண்கள் கைது

ஹொரணை, பொருவதந்த பகுதியில் உள்ள வீடொன்றில் 32 வயதுடைய நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்று கதவு, ஜன்னல்களைத் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்த பெண் இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கு வந்த மனைவி, குறித்த பெண்ணுடன் இணைந்து துடைப்பத்தால் கணவனைத் தாக்கியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )