விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை கைது

விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் சுமார் 5 கிலோகிராம் நிறையுடையது என சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This