லோஹான் ரத்வத்தேவுக்கு மஹிந்த மற்றும் நாமல் இரங்கல்

லோஹான் ரத்வத்தேவுக்கு மஹிந்த மற்றும் நாமல் இரங்கல்

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தேவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57 ஆவது வயதில் இன்று காலை
காலமானார்.

வைத்தியசாலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வருகைத்தந்திருந்தனர்.

இந்நிலையில் அவரது மறைவு நாட்டிற்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு ஒரு இழப்பு என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர் தனது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒரு குடும்பம் மற்றும் அரசியல் கட்சியாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

Share This