மஹேஷி விஜேரத்னவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மஹேஷி விஜேரத்னவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின்  விசேட வைத்தியர் மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

Share This