இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025 தொலைநோக்கு திட்டத்துடன் லைக்கா குழுமமும் இணைகிறது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025 தொலைநோக்கு திட்டத்துடன்  லைக்கா குழுமமும் இணைகிறது!

இந்தியப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025  தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரித்தானிய – ஐரோப்பாவை தளமாக கொண்ட லைகா குழுமம் (Lyca Group – UK-Europe)  மற்றும்  மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் (Mahaveer Jain Films)  இணைந்து,   உலகளாவிய பார்வையாளர்களுக்காக, 9 இந்திய படங்களை,    தயாரிக்க உள்ளன.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவை தளமாகக் கொண்ட லைகா குழுமத்தின் குழுமம் (Lyca Group (UK-Europe) தயாரிப்பு பிரிவான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions)  சுப்பஸ்ரார் ரஜினிகாந்த் நடித்த 2.0 (2018), இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் I & II உள்ளிட்ட பல பிரமாண்ட பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளது.

இப்போது, மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையால் ஈர்க்கப்பட்டு, உலக பொழுதுபோக்கு துறையில் இந்திய கதைசொல்லலை உயர்த்தும் செயற்பாட்டில் லைக்கா குழுமம் களமிறங்கியுள்ளது.

இந்த இலக்கினை அடைவதற்காக, லைகா புரொடக்ஷன்ஸ்  –  மகாவீர் ஜெயின் பிலிம்ஸுடன் இணைந்து, அடுத்த 3 ஆண்டுகளில், பார்வையாளர்களின் இரசனையில், தாக்கத்தை ஏற்படுத்தும் 9  படங்களை தயாரிக்கும் உத்தியோகபூர்வ கூட்டிணைவை  அறிவித்துள்ளது.

இந்த ஒத்துழைப்பின் மூலம், உலகளாவிய உள்ளடக்க உருவாக்க மையமாக இந்தியாவை மாற்றும் WAVES 2025  திட்டத்துடன் லைக்கா குழுமம்  இணைகிறது.

WAVES உச்சி மாநாட்டில், லைகா குழுமத்தின் தலைவர் கலாநிதி  அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் மகாவீர் ஜெயின் ஆகியோர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு இராஜ்ய அமைச்சர் கலாநிதி எல். முருகன் ஆகியோரை சந்தித்து இந்த முயற்சியில் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பிரதான நிகழ்வு குறித்துலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மகாவீர் ஜெயின் நிறுவனங்கள் இணைந்து, கூட்டாக கருத்து வெளியிட்டுள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குறிப்பாக “ இந்தியா ஒரு தீர்க்கதரிசன, ஆற்றல் மிக்க மற்றும் உணர்வுபூர்வமான பிரதமரை கொண்டிருப்பது மிகப்பெரிய அதிஷ்டம். இந்தியாவின் பண்பாடு, தத்துவங்கள் மற்றும் ஞானத்தை சினிமாவின் மூலம் உலகிற்கு எடுத்துச்சென்று, அன்பு, கருணை மற்றும் ஒற்றுமையை சக்திவாய்ந்த கதைகளால் பரப்புவதற்கு இதுவே சிறந்த தருணம்.”

அத்துடன் ” வருங்கால சந்ததியினருக்கு சிறந்த இடமாக, இந்தியா மற்றும் உலகை மாற்றுவதற்காக அயராது பணியாற்றும் மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க இந்த படங்கள் ஒரு சிறிய முயற்சியாகும்.” என லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மகாவீர் ஜெயின் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விசேடமாக லைக்கா குழுமம் தொலைத்தொடர்பு, சுகாதாரம், பயணம், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில்  23 நாடுகளில் செயல்படும் பல்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனமாக விளங்குகிறது.

மகாவீர் ஜெயின் பிலிம்ஸ், ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸுடன் இணைந்து “ஊஞ்சை” (2022) போன்ற படங்களை தயாரித்துள்ளது. வரவிருக்கும் திட்டங்களில் கார்த்திக் ஆர்யன் நடிக்கும் “நாக்ஜில்லா” (கரண் ஜோஹருடன்), விக்ராந்த் மாசே குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கராக நடிக்கும் சித்தார்த் ஆனந்தின் அனுதின thriller, இம்தியாஸ் அலியின் நட்பு கதை மற்றும் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share This