காதல் கோரிக்கை நிராகரிப்பு – துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம் பெண்

காதல் கோரிக்கை நிராகரிப்பு – துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம் பெண்

மைத்துனரின் காதல் கோரிக்கையை நிராகரித்ததால், கொல்கத்தாவில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பம் பதிவாகியுள்ளது.

மேலும் பெண்ணின் உடலிலிருந்து தலையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவின் ரீஜண்ட் பார்க்கிங் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து வெள்ளிக்கிழமை காலை, மோப்ப நாய்கள் உடல் உறுப்புகளைக் கண்டெடுத்தன.

உடல் உறுப்புகள் பொலிதீன் பையில் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்தன. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விசாரணையின் பின்னர் பெண்ணின் உடல் பாகங்களை மீட்டுள்ளனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மைத்துனர் ரஹ்மான் லஷ்கர் (35) குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

சந்தேகநபருடன் அந்த பெண் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இதன் போது தனது நீண்ட நாள் காதல் கோரிக்கையை நிராகரித்தமை காரணமாகவே இந்த கொலையை செய்ததாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொல்லப்பட்ட பெண் தனது கணவரை பிரிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. மைத்துனரின் காதல் கோரிக்கைக்கு பின்னர், அந்தப் பெண் அவரைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார்.

இவை தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் பெண்ணை கொலை செய்ய முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை, வேலை முடிந்து வெளியே வீடு செல்லவிருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.

பெண்ணின் தலையை துண்டித்த பின்னர், உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசியதாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

 

Share This