போர் மண்டலம் போல் காட்சியளிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்
காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு போர் மண்டலம் போல் காட்சியளிக்கின்றது. இது குறித்த காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
இந்த காட்டுத்தீ காரணமாக குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார 180,000 பேர் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர்.
பசிபிக் பாலிசேட்ஸில் பரவிய காட்டுத் தீ – ஆயிரக்கணக்கான கட்டிடங்களை சேதப்படுத்தியதுடன், முழு கட்டிடங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
ட்ரோன் காட்சிகளில், அழிக்கப்பட்ட சுற்றுப்புறத்தில் குப்பைகளால் சிதறடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் முற்றங்களின் வெற்று பிரேம்கள் காணப்பட்டன.
ஐந்து தீ விபத்துகளில், மூன்று முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்ஸில் கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் எரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கண்ட மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான பாலிசேட்ஸ் தீ, குறைந்தது 19,059 ஏக்கர்களை எரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அல்டடேனா மற்றும் பசடேனாவை தளமாகக் கொண்ட ஈட்டன் தீ சுமார் 13,690 ஏக்கர்களை எரித்துள்ளது. இந்த தீவிபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் சுமார் 863,000 பேரும் அண்டை நகரமான சான் பெர்னாடினோ கவுண்டியில் மேலும் 857,000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மின்சாரம் இன்றி இருப்பதாக PowerOutage.us தெரிவித்துள்ளது.