உள்ளூராட்சி தேர்தல் – பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க விசேட வேலைத்திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம், வேட்பாளர்கள் வன்முறை, அடக்குமுறை, அவமதிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து உற்றுநோக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் பல தரப்பினரின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
“அவளின் பயணத்தை ஆதரிப்போம்” என்ற கருப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.