உள்ளூராட்சி தேர்தல் – அமைதி காலத்திற்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இதுவரை சுமார் 90 சதவீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.