மீளப் பெறப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வைப்புத் தொகை

மீளப் பெறப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வைப்புத் தொகை

இரத்து செய்யப்பட்ட 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத் தொகையிலிருந்து 118 மில்லியன் ரூபாய் மீள பெறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இரத்து செய்யப்பட்ட தேர்தலின் வைப்புத் தொகையை மீள வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன்படி, அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் 118 மில்லியன் ரூபாயை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

தேவையான கலந்துரையாடல்கள் பொலிஸ் மா அதிபர், அரசு அச்சுப்பொறியாளர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோருடன் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This