
பேரிடரால் உயிரிழந்த கால்நடைகள்!! கோழி இறைச்சி குறித்து ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை
அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வந்தால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், பொது சுகாதார நெருக்கடியைத் தடுக்க அரசாங்கம் திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“பேரழிவின் காரணமாக சுமார் 400,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக,” பெர்னாண்டோ செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நோய் பரவல்கள் குறித்து கவலைகளை எழுப்பிய அவர், அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியான தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நன்கொடைகளைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பெறப்பட்ட நிதி மற்றும் சேத மதிப்பீடுகள் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரிடரின் தாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடுமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
