நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்

நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்தல் மற்றும் ஆட்சிமுறை தொடர்பில் தற்போது அவதானிக்கப்படும் சிக்கல்கள் குறித்து அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அமைப்பின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், அரச பல்கலைக்கழகங்களை சுதந்திரமாகவும் வலுவாகவும் மாற்றும் சீர்திருத்தங்களைக் கருத்தில் கொள்ளுமாறு சட்டவாக்க சபையை வலியுறுத்துகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பேராசிரியர் தீபிகா உடகம, பேராசிரியர் கமினா குணரத்ன, சட்டத்தரணி கே.டபள்யூ ஜனரஞ்சன, சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரோரா, சட்டத்தரணி அர்மிசா டீகல், சட்டத்தரணி தர்ஸன குருப்பு ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Share This