H​1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

H​1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு  தாக்கல்

H​1B விசாவுக்​கான கட்​ட​ணத்தை 01 லட்​சம் டொலராக அதி​கரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்பின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கூட்டமைப்பு ஒன்று,  ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த கட்டண உயர்வை ரத்து செய்யக்  கோரி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

H​1B  விசாவுக்​கான புதிய விதி​முறை​களை ட்ரம்ப் கடந்த செப்​டம்​பர் மாதம்  19 ஆம் திகதி  வெளி​யிட்​டார்.

அதில், H​1B  விசாவுக்​கான கட்​ட​ணத்தை 1 லட்​சம் டொல​ராக அதி​கரிப்​ப​தாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக2,000 டொலரிலிருந்து 05 ஆயிரம் டொல​ராக கட்​ட​ணத்தை அதி​கரித்த ட்ரம்ப், தற்​போது

பன்​மடங்கு உயர்த்​தி இருப்பது திறமை​யான வெளி​நாட்டு தொழிலாளர்​களை நம்​பி​யிருக்​கும்

அமெரிக்க நிறு​வனங்​களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளன.

H​1B  விசா திட்டம், வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை அமெரிக்காவில்  பணியமர்த்துவதற்கான ஒரு முக்கிய திட்டம்.

இது அமெரிக்காவின் புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  சிறப்புத் துறைகளில் பணியாளர்களை நிரப்ப அனுமதிக்கிறது.

அரசின் தற்போதைய முடிவால், வைத்தியசாலைகள் மற்றும் ஊழியர்களையும், தேவாலயங்கள், போதகர்களையும்,  வகுப்பறை ஆசிரியர்களையும், நாடு முழுவதும் உள்ள தொழில்கள் முக்கிய கண்டுபிடிப்பாளர்களையும் இழக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த உத்தரவை தடுத்து, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான முன் கணிப்புத் தன்மையை  மீட்டெடுக்குமாறு கோருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

Share This