கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலி

கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.