கரூர் சம்பவம் – விஜய் கைது செய்யபடுவாரா?

தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து ஆண்டு தமிழகத்தின் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களையும், மக்கள் சந்திப்புகளையும் முன்னெடுத்துள்ளன.
குறிப்பாக ஆளும் கட்சியான தி.மு.க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மற்றும் பெறும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் த.வெ.க ஆகிய கட்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் மக்கள் சந்திப்பு நடத்தியிருந்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
இந்நிலையில், அதிக மக்கள் தொகை காரணமாக பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதற்கு முன்னர் மத நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நெரிசலில் தான் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து இருக்கிறது. ஆனால் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏற்கனவே ஆந்திராவில் கடந்த 2022ஆம் ஆண்டு நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என உயர் நீதிமன்றம் ஷகூறியிருந்தது.
இந்தநிலையில் தான் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 39 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனால் விஜய் உள்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.