கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுப்பு

கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ தலதா வழிபாடு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் (27) நிறைவடைந்தது.
இதனையடுத்து கண்டி நகரை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் நேற்று(27) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.
கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் பணியாளர்களும் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பல தன்னார்வ குழுக்களும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தலை முன்னிட்டு மூடப்பட்ட கண்டி நகரிலுள்ள 37 பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.