இலங்கையர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பு

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 32 ஆவது ஆசியன் பிராந்திய மன்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றார்.
அமைதி/பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார செழிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆசியன் பிராந்திய மன்றத்தின் முக்கிய முன்னுரிமைகளுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் உச்சிமாநாட்டில் வலியுறுத்தினார்.
2025-2026 காலகட்டத்தில் அமைதி காக்கும் முயற்சிகளில் ஆசியான் பிராந்திய மன்றத்தின் உறுப்பு நாடுகளுடன் இலங்கை மிகவும் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டுடன் இணைந்து, அமைச்சர் விஜித ஹேரத் மலேசியப் பிரதமரையும் சந்தித்தார்.
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டன.
இலங்கையர்களுக்கு பத்தாயிரம் வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மலேசிய மனிதவள அமைச்சகத்தின் பொதுச் செயலாளர், உள்துறை அமைச்சகத்தின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடனும் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடியுள்ளார்.