மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா வழங்கப்படும் – ஜீவன் கேள்வி
![மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா வழங்கப்படும் – ஜீவன் கேள்வி மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா வழங்கப்படும் – ஜீவன் கேள்வி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/26-1.jpg)
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (07.07) பாராளுமன்றத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2024 ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கணிசமான நிதி ஓதுக்கீடானது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
பெருந்தோட்ட மக்களுக்கு மட்டும் வீடமைப்பு, வைத்தியசாலைகள் ,பாடசாலைகள், வீதிகள் அபிவிருத்தி ஆகியன தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை மாற்றி அனைத்து துறைசார் அமைச்சின் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.
மலையகத்தில் நாங்கள் 70, 80 ஆண்டுகள் இருந்ததினால் தான் மலையக மக்கள் இன்றும் இருகின்றார்கள். எங்களுக்கு அனுதாபங்கள் தேவையில்லை அங்கீகாரமே வேண்டும். தொண்டமானின் நாமத்தை வைத்து அரசியல் நடத்துவோர் அரசியல் நடத்தட்டும்.
நான் தோட்ட உட்கடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் அதிகளவிலான வீட்டு உரிமை பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அவ் வீட்டு உரிமை பத்திரங்கள்தான் தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா வழங்கபோகின்றது என்பதை தெளிவாக அறியப்படுத்த வேண்டும்” என்றார்.