சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த  ஜீவன்

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த  ஜீவன்

நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் மற்றும் தமிழ்நாட்டின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி பி. சிதம்பரம் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சிவகங்கை தொகுதியின் மானகிரியில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜீவன் தொண்டமானின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனது தமிழ்நாட்டு விஜயத்தின்போது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (TNTA துணைத் தலைவருமான திருவாளர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக தெரிவித்த  ஜீவன் தொண்டமான் இந்தியா-இலங்கை பரஸ்பர விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

 

 

CATEGORIES
TAGS
Share This