ஜீப் – லொறி விபத்து….6 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சில பக்தர்கள் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த ஜீப் வண்டி மிர்சாமுராத் அருகில் ஜிடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியுள்ளது.
இவ் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மோதல் மிகவும் தீவிரமாக இருந்தமையால் சிக்குண்டவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக மிர்சாமுராத் பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.