பணம் இன்றி காசோலை கொடுத்தால் சிறைத்தண்டனை – விரைவில் புதிய சட்டம்

பணம் இன்றி காசோலை கொடுத்தால் சிறைத்தண்டனை – விரைவில் புதிய சட்டம்

வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலையை வழங்குபவர்களுக்கு அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுத்த போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை வழங்குவதற்கும், மூடப்பட்ட கணக்கிலிருந்து காசோலைகளை வழங்குவதற்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிமாற்ற அவசரச் சட்டத்தில் தொடர்புடைய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களின் கீழ், விதிக்கப்படும் அபராதத் தொகை காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு சமமான தொகையாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், காசு இல்லாமல் மீளத் திரும்பும் காசோலை வழக்குத் தொடரலில் சான்றாகக் கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதே இந்தத் திருத்தத்தின் நோக்கம் என்று நீதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This