அமெரிக்காவிற்கு கார் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது ஜாகுவார் லேண்ட் ரோவர்

அமெரிக்காவிற்கு கார் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது ஜாகுவார் லேண்ட் ரோவர்

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு அதிக வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான தனது கார்களின் ஏற்றுமதியை நிறுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் ஆண்டு உற்பத்தியில் கால் பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடுமையான வரிகளுக்கு நீண்டகால தீர்வுகள் உருவாக்கப்படும் வரை, குறுகிய கால நடவடிக்கையாக ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் எட்டு கார்களில் ஒன்று அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், டிரம்ப் விதித்த புதிய வர்த்தக விதிகள் காரணமாக வாகன உற்பத்தித் துறையில் 25,000க்கும் மேற்பட்ட நேரடி வேலைகள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share This