யாழ் மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்பு – உச்ச நீதிமன்றை நாடும் சுயேச்சைக் குழு

யாழ் மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்பு – உச்ச நீதிமன்றை நாடும் சுயேச்சைக் குழு

மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனவும், குறித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையில் யாழ்ப்பாண மாநகர சபை, வலிகாமம் கிழக்கு மற்றும் வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.

இதில் யாழ் மாநகர சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த சுயேட்சை குழுவினர் கருத்து தெரிவிக்கையில்,

நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம். அதன்படி யாழ் மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்விடயம் குறித்து நாம் சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை செய்துள்ளோம்.

அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என தெரிவித்தார்.

Share This