இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை

இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாளை முதல் அவர் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது விஜயத்தின்போது, இலங்கை – இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் ஆரம்ப அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான உரையாடலுக்கான கட்டமைக்கப்பட்ட செயற்பாட்டுச் சட்டகத்தை வழங்குகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டன.

மரியா த்ரிபோடி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This