சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது – சஜித்

சட்டத்தின் இறுதி முடிவு மூன்றாம் தரப்பினரால் கணிக்கப்படுவது பாரதூரமானது – சஜித்

சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகத்தில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்திசாலைக்கு சென்றிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமேதாச இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நீதிக்கான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படும் நேரத்தில், சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை கணிக்க முடியாது.

இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என நாட்டு மக்கள் நம்ப வேண்டும்.

நான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )