காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில்76 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில்76 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தற்போது வரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால் பலஸ்தீனியர்கள் பட்டினியால் வாடுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் மோதல் மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் சிறியளவான உதவியை மட்டுமே பஞ்சத்தில் வாடும் பகுதிக்குள் நுழைய அனுமதிப்பதாகவும் முற்றுகையிடப்பட்ட வடக்குக்கு எதுவும் சென்றடையவில்லை எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This