காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி

காசா நகரத்தின் மீது இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வாரம் காசா மீது இஸ்ரேல் மீண்டும் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 200 குழந்தைகளும் 110 இற்கும் மேற்பட்ட பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காசா போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முறித்ததைத் தொடர்ந்து இதுவரை 600 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 49,617 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 112,950 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.