காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 81 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 81 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 81 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 422 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர் நிறுத்தம் எட்டப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

உதவி தேவைப்படும் பலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களில்
வெளியான தகவல்கள் காசாவில் போர்க்குற்றங்களுக்கு மேலும் சான்றாகும் என் காசா அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை நடத்தும் உதவி விநியோக தளங்கள் கொலைக் களத்தை
உருவாக்கியுள்ளதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ அண்மித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை
135,000 ஐ ஆக பதிவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This