காசா மீது இஸ்ரேல்மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட அண்மையத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா பகுதியில் உள்ள அல் அக்ஸா, நாசர் மற்றும் ஐரோப்பிய மருத்துவமனைகள் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
காசாவில் போர்நிறுத்தம் மற்றும் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் எண்டனி பிளிங்கன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உடன்பாட்டிற்கமை போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து இதுவரை 45,885 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 109,196 பேர் காயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.