கைதிகளை விடுப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

திட்டமிட்டவாறு காசாவிலிருந்து நாளை சனிக்கிழமை கைதிகள் மூவரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியதுடன், பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது.
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஹமாஸின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, கட்டயாத்தின் பேரில் இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான பலஸ்தீனியர்கள் தங்கள் சேதமாக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒருவருடத்திற்கும் மேலாக நீடித்த இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.